SMA
Serpahic Mass Association (SMA)
Seraphic Mass Association (SMA)
நூறு ஆண்டுகளை கடந்த செராபிக் திருப்பலி குழுமம்
மறைபரப்புப் பணியில் மிக்க ஆர்வம் கொண்ட ரபிரேடாப் போல்ஜர் என்னும் சுவிட்சர்லாந்து மாது 1899ல் இக்குழுமத்தை நிறுவினார். இது 13-ம் சிங்கராயரின் அங்கீகாரமும் புனித பத்தாம் பத்திநாதர், 14-ம் ஆசீர்வாதப்பர், 11ம் பத்திநாதர் போன்ற திருத்தந்தையர்களால் போற்றிப் புகழப்பட்டது. செராபிக் என்றால் பக்தி சுவாலர்கள் என்று பொருள்படும். செராபிக் திருப்பலி குழுமத்தில் இணைந்துள்ள இறைமக்கள், கப்புச்சின் துறவிகள் ஆற்றும் மறைபரப்பு பணியில் பங்கு பெறுகிறார்கள். நற்செய்தியை அறிவிக்கும் பணி இறைமக்களின் ஓர் அடிப்படைக் கடமையாகும். எனவே யாவரும் தங்களையே ஆழ்ந்து உள்ளரங்கமாகப் புதுப்பிக்குமாறு 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் எல்லோரையும் அழைக்கின்றது. இவ்வாறு அனைவரும் நற்செய்தியைப் பரப்ப தாங்கள் கொண்டுள்ள பொறுப்பைப் பற்றிய உயிருள்ள உணர்வு பெற்று எல்லா இனத்தவருக்கும், மறைபோதகப் பணிபுரிவதில் தங்களுக்குரிய பங்கை ஏற்பார்களாக (2ம் வத்திக்கான் பொதுச்சங்கம், மறைபரப்புப் பணி எண். 35) என்று இத்திருச்சங்கம் இறைமக்களுக்கு ஊக்கமூட்டுகிறது.
இன்று 2500 கப்புச்சின் துறவிகள் 76 நாடுகளில் மறைபரப்புப் பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். 200 இந்திய கப்புச்சின் துறவிகள் ஆப்பிரிக்காவில் சிம்பாப்வே, பொலேவாயோ, சிம்யும்யா, கோவிமெனியோனி, எத்தியோப்பியா, டான்சானியா, புரக்கினபாசோ நாடுகளிலும் அரேபியர் நாடுகளிலும், மலேசியாவிலும், இலங்கையிலும் பணிபுரிகின்றனர். மருத்துவமனைகள், குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்கள் நடத்துதல், இலவச சட்டஉதவிகள் வழங்குதல் போன்ற சமூக பணியிலும் கல்வி புகட்ட பள்ளிகளையும் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் சேவை சிறக்க, பலகோடி மக்களுக்கு பயன்பட வேண்டுமானால் உங்கள் தியாகம் நிறைந்த ஜெபமும் தாராளமான பொருளுதவியும் தேவை. மேலும் நீங்கள் செராபிக் திருப்பலி குழுமத்தில் இணைந்து ஆன்மீக பலனை பெறவும் கப்புச்சின் மறைபரப்பு பணியைப் பலப்படுத்தவும் தேவ அழைத்தலை உருவாக்கவும் இது ஒரு அரிய வாய்ப்பு.
செராபிக் திருப்பலி குழுமம் SMA உங்களை உறுப்பினர்களாக இணைய அன்போடு அழைக்கிறது.
1. இது ஒரு ஆன்மீக அருள் வழங்கும் குழுமம்
2. SMA உறுப்பினர்கள் தினமும் உலகெங்கும் உள்ள 6,850 கப்புச்சின் குருக்களால் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலிகளின் ஆன்மீகப் பலன்களையும் பெறுவர்.
3. தினமும் 10,206 கப்புச்சின் துறவிகளின் ஜெப உதவிகளை பெறுவர்.
4. போர்ச்சுங்குலா பரிபூரணப் பலன் : ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி கப்புச்சின் சபையின் ஆலயத்தை சந்தித்து பாவங்களுக்கு மனம் வருந்தி ஒப்புரவு அருட்சாதனம் பெற்று, திவ்விய நற்கருணை உட்கொண்டு, திருத்தந்தையின் கருத்துக்களுக்காக செபித்து ஒரு நம்பிக்கை அறிக்கை, ஒரு இயேசு கற்பித்த செபம், ஒரு மங்கள வார்த்தை செபம் செபித்தால் பரிபூரணப் பலன் பெறுவீர்.
5. ஆண்டுதோறும் 6 பரிபூரண பலன்களும் மரண நேரத்தில் ஒரு பரிபூரண பலனும் பெறலாம்.
6. உறுப்பினராகி கப்புச்சின் தேவ அழைத்தலுக்கும் மறைப் பணிக்கும் ஆதரவு வழங்குகிறீர்.
7. உங்களின் காணிக்கை கப்புச்சின் மறைப்பணிக்காக பயன்படுத்தப் படுகிறது. தங்களுக்கு உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்படும்.
8. ஆசீர்வதிக்கப்பட்ட சான்றிதழ் புனிதப் படத்தை வாங்கி நீங்கள் பிறருக்கு “ஆன்மீக பரிசாக” வழங்கலாம்.
9. வாருங்கள் நாம் ஒரு ஆன்மீக குடும்பமாக வளர்வோம்.
சந்தா விபரங்கள்
DETAILS OF SUBSCRIPTION
1. ஒரு வருட உறுப்பினர் :
இறந்தோருக்காக – Rs. 300/-
One year Membership: For the departed souls – Rs. 300/-
2. ஒரு வருட உறுப்பினர் :
வாழ்பவருக்காக – Rs. 300/- வாழும் குடும்பத்திற்காக – Rs. 500/-
One year Membership: For a living individual person – Rs. 300/ For a living Family – Rs. 500/-
3. வாழ்க்கை உறுப்பினர் :
வாழ்பவருக்காக – Rs. 1000/- & மேலாக வாழும் குடும்பத்திற்காக – Rs. 1500/- & மேலாக
Life Membership: For a living individual person – Rs. 1000/- & above For a living Family – Rs. 1500/- & above
4. விருப்பமுள்ளோர் இம்மறைப்பணிக்கு தொடர்ந்து உதவலாம்.
Those who are interested can support our mission regularly.
தொடர்புக்கு:
அருட்பணி. A. செல்வராஜ் க.ச.
பதோனி இல்லம், தில்லைநகர், திருச்சி
அலைபேசி: 91.75983 06107
மின்ன்னஞ்சல்: selvaascap@gmail.com